அனைத்து பிராந்தியங்களிலும் இந்திய மருத்துவ கழக குழு ஆய்வு - கவர்னர் கிரண்பெடி தகவல்

புதுவையின் அனைத்து பிராந்தியங்களிலும் இந்திய மருத்துவக்குழு ஆய்வு செய்ய கேட்டுக்கொள்ளப்படும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
அனைத்து பிராந்தியங்களிலும் இந்திய மருத்துவ கழக குழு ஆய்வு - கவர்னர் கிரண்பெடி தகவல்
Published on

புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடி கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்ந்து காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். இதையொட்டி சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசையை தாமதமின்றி உடனடியாக தயாரிக்கவேண்டும். இது குறிக்கோளை உறுதிப்படுத்தவும் இந்திய மருத்துவ கழகத்தின் மதிப்பீட்டையும் உறுதி செய்யும்.

இந்திய மருத்துவ கழகத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் கவுர் தலைமையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அது ஆய்வு செய்யப்படும். சிறப்பு செயலாளர் பங்கஜ்குமார் ஜா நாள்தோறும் பிற்பகல் 1 மணிக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளுடன் பொதுவான விவரங்களை விளக்கவேண்டும்.

இறப்பு தொடர்பான விவகாரங்கள் அதற்கான காரணங்களுடன் நாள்தோறும் பகிரப்பட வேண்டும். அனைத்து பிராந்தியங்களுக்கும் இந்திய மருத்துவ கழகத்தின் குழு சென்று ஆய்வு செய்ய கேட்டுக்கொள்ளப்படும். ஏனாமில் சீனியர் டாக்டர் ஒருவரை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com