ஆண்டிப்பட்டியில் கூலித்தொழிலாளி வீட்டில் ரூ.1¼ லட்சம், நகை திருட்டு

ஆண்டிப்பட்டியில் கூலித்தொழிலாளி வீட்டில் ரூ.1¼ லட்சம், நகையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
ஆண்டிப்பட்டியில் கூலித்தொழிலாளி வீட்டில் ரூ.1¼ லட்சம், நகை திருட்டு
Published on

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி மேலத்தெருவில் வசித்து வருபவர் சரவணன் (வயது 54). கூலித்தொழிலாளி. இவருக்கு, அதே பகுதியில் சொந்தமாக 2 வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள மற்றொரு வீட்டில் தனது குடும்பத்தினருடன் அவர் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவு நேரத்தில் பூட்டியிருந்த வீட்டுக்கு மர்ம நபர்கள் வந்தனர். பின்னர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கிருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், ஒரு பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். காலையில் எழுந்த சரவணன், அந்த வீட்டுக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு பணம், நகை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் பென்னி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சிறிதுதூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள், வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போலீசாருக்கு சவால் விடும் வகையில், ஆண்டிப்பட்டி நகரில் கடந்த ஒரு மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர் திருட்டு காரணமாக மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. எனவே மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தொடர் திருட்டில் ஈடுபடுவோரை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com