அரியலூரில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜாக்டோ-ஜியோ) நேற்று மாலை அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூரில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
Published on

அரியலூர்,

ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செயலாளர் பாலசுப்ரமணியன், தமிழக தமிழாசிரியர் கழக செயலாளர் கவுதமன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் எழில், தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தை தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் நம்பிராஜ் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

7-வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய உயர்வில் 21 மாத கால நிலுவை தொகையினை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தமிழக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் மன்றத்தின் பொது செயலாளர் இளம்பரிதி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com