பெங்களூருவில் பயங்கரம் முன்விரோதத்தில் வாலிபர் குத்திக் கொலை மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

பெங்களூருவில் முன்விரோதத்தில் வாலிபரை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைத்து துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவில் பயங்கரம் முன்விரோதத்தில் வாலிபர் குத்திக் கொலை மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
Published on

பெங்களூரு,

பெங்களூரு அனுமந்தநகர் அருகே ராஜேந்திரநகரில் வசித்து வந்தவர் பரத் (வயது 20). இவரது சொந்த ஊர் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா ஆகும். நேற்று முன்தினம் இரவு அனுமந்த நகர் அருகே காளிதாசா லே-அவுட் பகுதியில் பரத் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பரத்தை வழிமறித்தனர்.

பின்னர் அந்த மர்மநபர்கள் நடுரோட்டில் வைத்து பரத்தை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர். பலத்த கத்திக்குத்து காயம் அடைந்து உயிருக்கு போராடிய பரத் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே பரத் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com