

பெங்களூரு,
பெங்களூரு நாகரபாவி அருகே உள்ள ஜோதிநகரை சோந்தவர் பிரசாத்(வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் பிரசாத் கடந்த 11-ந்தேதி இரவு தனது மனைவியிடம் ரூ.500 வாங்கிக் கொண்டு அப்பகுதியில் உள்ள மதுபான கடைக்கு மது அருந்த சென்றார்.
மதுபான கடையில் வைத்து பிரசாத் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் உள்ள மேஜையில் 5 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், பக்கத்து மேஜையில் அமர்ந்து மது அருந்தியவர்களில் ஒருவரின் செல்போன் மாயமானதாக தெரிகிறது. இதுகுறித்து அவர்கள், பிரசாத்திடம் கேட்டுள்ளனர்.