பெங்களூருவில் பயங்கரம் கல்லால் தாக்கி வாலிபர் கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பெங்களூருவில் கல்லால் தாக்கி வாலிபரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூருவில் பயங்கரம் கல்லால் தாக்கி வாலிபர் கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

பெங்களூரு,

பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரெயில்வே பிளாட்பாரம் ரோட்டில் உள்ள ரெயில்வே துறைக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த காலி நிலத்தில் ஒரு வாலிபர் தலை நசுங்கி நிலையில் ரத்த வெள்ளத்தில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி உடனடியாக அவர் சேஷாத்திரிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அந்த வாலிபருக்கு 25 வயது இருக்கும்.

மேலும் வாலிபரின் தலை நசுங்கி இருந்ததுடன், அவரது மர்மஉறுப்பில் பலத்தகாயங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது வாலிபரின் மர்மஉறுப்பில் கல்லால் தாக்கியும், அவரது தலையில் கல்லைப்போட்டும் மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அந்த வாலிபரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலையாளிகளை கைது செய்ய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து சேஷாத்திரிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com