

தேனி,
தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப் பாளருமான ஓ.பன்னீர் செல்வம் 3-வது முறையாக போட்டி யிடுகிறார். அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்காக அ.தி.மு.க.வினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்குசேகரித்து இயக்குன ரும், நடிகருமான மனோ பாலா போடி நகரில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். போடி நகரின் முக்கிய வீதிகளில் அவர் வாக்குசேகரித்து பேசினார். தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத் போடி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகனும், கைலாச நாதர் கோவில் அன்பர் பணி செய்யும் குழு தலைவருமான வி.ப.ஜெயபிரதீப் போடி நகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். போடியில் ஆரியவைசிய சோழியசெட்டியார் சமுதாய தலைவர்கள் மற்றும் பழனி செட்டிபட்டியில் பல்வேறு சமுதாய தலைவர்களை வி.ப.ஜெயபிரதீப் சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் போடியில் வெள்ளாளஞ்செட்டியார் சமுதாய கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மத்தியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு திரட்டி பேசினார்.
மேலும், போடி நகரில் உள்ள தெருக்களில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மருமகள் ஆனந்தி ரவீந்திரநாத் தலைமையில் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று வாக்குசேகரித்தனர். வீடு, வீடாக சென்று மக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதுபோல், போடி தொகுதி யின் பல்வேறு இடங்களிலும் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று ஓ.பன்னீர் செல்வத்துக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, போடி நகராட்சி 11-வது வார்டு தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜே.செல்வம் நேற்று போடி நகர அ.தி.மு.க. செயலாளர் பழனிராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந் தார். அவருக்கு நகர செய லாளர் பழனிராஜ், அவைத் தலைவர் மணிகண்டன், நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுதர்சன் ஆகி யோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.