சென்னையில், கொலை சம்பவங்கள் குறைந்துள்ளது: போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு பரிசு

சென்னையில் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும், என்றும் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.
சென்னையில், கொலை சம்பவங்கள் குறைந்துள்ளது: போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு பரிசு
Published on

சென்னை,

சென்னையில் அடுத்த 15 நாட்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி அடையாறு எல்.பி.சாலை சிக்னல் சந்திப்பில் நேற்று நடந்தது. போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொதுவாக விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறைதான் உள்ளது. ஆனால் புதிதாக ஒரு முயற்சியை தற்போது தொடங்கி உள்ளோம். வரும் 15 நாட்கள் சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. சிறப்பாக போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி, எந்த வழக்கிலும் சிக்காமல் வாகனம் ஓட்டுபவர்கள் 60 பேர்களை தினமும் தேர்வு செய்ய உள்ளோம். வெவ்வேறு இடங்களில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு 15 நாட்களிலும் 900 பேர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு சிறிய பரிசுகள் சான்றிதழ்களுடன் வழங்கப்படும்.

சென்னையில் ரவுடிகள் பட்டியலிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். கடந்த 8 மாதங்களில் சென்னையில் கொலை சம்பவங்கள் 20 சதவீதம் குறைந்துள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சைபர் ஆய்வகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் அந்த பணி முடிந்து, சைபர் ஆய்வகம் செயல்பட தொடங்கும்.

சென்னையில் கஞ்சா ஒழிக்கும் பணியில் சில்லறை வியாபாரிகள் மட்டும் அல்லாமல் மொத்த வியாபாரிகளும் கைது செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com