சின்னமனூரில் பரபரப்பு: சார்பதிவாளர் அலுவலகத்தில் தீ

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில் ஜெனரேட்டரில் தீ விபத்து நடந்து.
சின்னமனூரில் பரபரப்பு: சார்பதிவாளர் அலுவலகத்தில் தீ
Published on

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், கடந்த 19-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து சென்றனர். இதையடுத்து சின்னமனூர் சார்பதிவாளர் பாலமுருகன் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் வெளிப்புறத்தில் சுவர் அருகே அமைக்கப்பட்டு இருந்த ஜெனரேட்டரில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் ஜெனரேட்டரின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து நாசமானது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில் ஜெனரேட்டரில் தீ விபத்து நடந்து இருப்பது பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது தீ வைக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் சின்னமனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com