கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது.
கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
Published on

தாமரைக்குளம்,

புனித வெள்ளியை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் புதுமார்க்கெட் வீதியிலுள்ள சி.எஸ்.ஐ தூய ஜார்ஜ் ஆலயத்தில் அருட்தந்தை ராஜசேகரன் தலைமையிலும், அரியலூர் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோணி சாலமோன் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதேபோல் பெரம்பலூரில் உள்ள தூய பனிமயமாதா ஆலயத்தில் புனிதவெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. காலை 6 மணிக்கு, ஏசு சிலுவையில் அறையப்பட்டபோது சந்தித்த துயரங்களை விளக்கும் வகையில் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவைபாடு பாடல்களை பாடியபடி பெரம்பலூர் டோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்துக்கு வந்தனர். பின்னர் ஆலயத்தில் நற்கருணை ஆராதனை நடந்தது. பெரம்பலூர் பங்கு தந்தை அடைக்கலசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதே போல், சி.எஸ்.ஐ தேவாலயம், தூய யோவான் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com