கோவையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சென்ற அரசு பஸ் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

கோவையில் ஒரு அரசு பஸ் விபத்து ஏற்படுத்தும் வகையில் சென்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சென்ற அரசு பஸ் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
Published on

கோவை,

அரசு பஸ்களை பொதுமக்கள்சுத்தமாக வைத்துக்கொள்ள உதவ வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர். ஆனால்அரசு பஸ்களைமுறையாக பராமரிக்காவிட்டாலும்பரவாயில்லை.மற்றவர்களுக்குவிபத்து ஏற்படுத்தாத வகையில் பஸ்கள் இருந்தாலே போதுமானது என்று சொல்லும் வகையில் கோவையில்நேற்றுக்காலைஒரு சம்பவம் நடந்தது.

கோவைஉக்கடத்தில் இருந்து ஒரு அரசுடவுன் பஸ் நேற்றுக்காலைசிங்காநல்லூர்நோக்கி சென்றுகொண்டிருந்தது.அந்த பஸ்சின்முன்புற சக்கரத்துக்குஅருகில்ஏர் பில்டர்கள்உள்ளன. அதை அடிக்கடி சுத்தம்செய்வதற்காகசிறியபெட்டி போன்று செய்யப்பட்டுஅதற்கு சிறியகதவும்பொருத்தப்பட் டுள்ளது. தகட்டினால் செய்யப்பட்டஅந்த சிறியகதவு சரியாகமூடப்படாததால்அது திறந்துகாணப்பட்டது. பஸ் சாலையில் செல்லும் போதுஅந்த சிறியகதவு திறந்து பஸ்சிற்கு வெளியே சுமார் ஒருஅடி தூரத்துக்குநீட்டியபடி இருந்தது.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த கோவை-திருச்சி சாலையில்அந்த பஸ்சென்றபோதுஇருசக்கரவாகனங்களில்சென்றவர்கள்அதை உரசியபடியே சென்றனர். விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனஓட்டிகளை பதம்பார்க்கும்வகையில் திறந்து கிடந்தஅந்த கதவைடிரைவர் மூட முயற்சி செய்யவில்லை. பஸ்சை நிறுத்திஅந்த கதவை கயிறுகட்டி திறக்காதஅளவிற்கு மூடாமல் டிரைவர்அலட்சியமாக பஸ்சைதொடர்ந்து ஓட்டிச் சென்றார். இதுகுறித்து வாகன ஓட்டிகள்சிலர்கூறியதாவது:-

அரசு பஸ்கள்என்றாலே பழுதடைந்த வாகனம் என்ற கருத்து மக்களிடையே பரவலாக நிலவி வருகிறது. ஆனால் அதற்கும்மேலாக சாலையில்மற்றவர்களுக்குவிபத்து ஏற்படுத்தும் வகையிலும்அரசு பஸ்கள்உள்ளன என்பதை நிரூபிக்கும் வகையில்அந்த பஸ்டிரைவர் மற்ற வாகனஓட்டிகளை பற்றி கவலைப்படாமல்ஓட்டிச் சென்றது அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறி னார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com