எட்டயபுரத்தில் பழமைவாய்ந்த தெப்பக்குளம்பராமரிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

எட்டயபுரத்தில் பழமைவாய்ந்த தெப்பக்குளம் பராமரிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
எட்டயபுரத்தில் பழமைவாய்ந்த தெப்பக்குளம்பராமரிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Published on

எட்டயபுரம்,

வானம் பார்த்த பூமியான எட்டயபுரம் வடக்கு ரத வீதியில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த தெப்பக்குளம் உள்ளது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தெப்பக்குளம் பல்வேறு சிறப்புகளை பெற்றது. தெப்பக்குளத்தைச் சுற்றிலும் 7 இடங்களில் படித்துறைகள் உள்ளன. 12 மாதங்களைக் குறிக்கும் வகையிலும் ஒவ்வொரு படித்துறையிலும் 12 படிகள் உள்ளன. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்று ஒவ்வொரு படையும் தனித்தனியாக நீர் அருந்தும் வகையில் படித்துறைகள் அமைக்கப்பட்டு, அதன் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகின்றன.தெப்பக்குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி இருக்கும் வகையில், அருகில் உள்ள பாண்டியன் கண்மாயில் இருந்து தெப்பக்குளத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டு இருந்தது. கடும் வறட்சியிலும் மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கு, தெப்பக்குளத்தின் நடுவில் கிணறும் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் நாளடைவில் தெப்பக்குளம் பராமரிப்பற்று மண்மேடுகள் நிறைந்து காணப்படுகிறது. தெப்பக்குளம் மற்றும் அதனைச் சுற்றிலும் சீமை கருவேல மரங்கள், புதர் செடிகள் நிறைந்து உள்ளன. தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாயும் தூர்ந்து விட்டது. இதனால் மழைக்காலத்திலும் தெப்பக்குளத்துக்கு போதிய தண்ணீர் வருவது இல்லை.

இதனால் தெப்பக்குளம் எப்போதும் வறண்ட நிலையிலேயே உள்ளது. எனவே பழமைவாய்ந்த தெப்பக்குளத்தை முறையாக பராமரித்து, தூர்வார வேண்டும். தெப்பக்குளத்தில் உள்ள புதர் செடிகள், சீமை கருவேல மரங்களை அகற்றி, தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாயையும் தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com