கும்மிடிப்பூண்டியில் டிரான்ஸ்பார்மரில் ஏறி வடமாநில தொழிலாளி தற்கொலை

கும்மிடிப்பூண்டியில் டிரான்ஸ்பார்மரில் ஏறி வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டியில் டிரான்ஸ்பார்மரில் ஏறி வடமாநில தொழிலாளி தற்கொலை
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழைய வயர்களில் இருந்து தாமிர கம்பிகளை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிசாவை சேர்ந்த அல்பினஸ் எக்கா (39) என்பவர் தங்கி கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை தொழிற்சாலையின் பின்புற கேட் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி அதில் கை வைத்து அல்பினஸ் எக்கா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இன்னும் திருமணம் ஆகாத அவர், தொழிற்சாலையில் வேலை பளு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடன் தங்கி உள்ள சக தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவில்லை.

தீயணைப்பு அதிகாரி செல்வராஜ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொழிலாளியின் தற்கொலைக்கான காரணம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com