

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று கிருஷ்ணகிரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு அ.தி.மு.க. வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், ஓசூர் அருகே மோரனப்பள்ளியில் ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
விழாவில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக்சிரு, மாவட்ட கலெக்டர் பிரபாகர், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, எம்.எல்.ஏ.க்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மோரனப்பள்ளியில் 7.68 ஏக்கர் பரப்பளவில் ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைய உள்ளது. இந்த மையத்தில் 3 ஆயிரத்து 702 ஹெக்டேர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மலர் ஏல மையத்தில் ஜெர்பரா, கார்னேசன், ரோஜா, மேரிகோல்டு உள்ளிட்ட மலர் வகைகள் சாகுபடி செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு சுமார் 39 ஆயிரத்து 383 டன் மலர் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையில் அன்னிய செலாவணி கிடைக்கும். இந்த மலர் ஏல மையம் மூலம் மலர் சாகுபடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.எம்.மாதையன், முன்னாள் எம்.எல்.ஏ. மொரப்பூர் கே.சிங்காரம், கே.இ.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர்கள் அம்சா ராஜன், லாவண்யா ஹேம்நாத், முன்னாள் எம்.பி. பெருமாள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெருமாள், முன்னாள் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தென்னரசு, எஸ்.கே.லாட்ஜ் சுப்பிரமணியன், நகர செயலாளர் கேசவன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் சோக்காடி ராஜன், ஏ.வி.எம். மது என்கிற ஹேம்நாத், ஜாகீர் உசேன், கணேசன், ஜெயபாலன், முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் கே.ஆர்.சி. தங்கமுத்து, எம்.ஜி.எம்.ராமு, அக்கொண்டப்பள்ளி கூட்டுறவு சங்க தலைவர் முனிரெட்டி, ஓசூர் முன்னாள் கவுன்சிலர்கள் பி.ஆர்.வாசுதேவன், அசோகா, ஸ்ரீதர், நாராயணரெட்டி, ரமேஷ், முத்துராஜ், சிவாரெட்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அமீர்ஜான், ஜெயராம், பாகலூர் ஊராட்சி துணைத்தலைவர் சீனிவாசரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை இயக்குனர் செந்தில், குன்னத்தூர் பெருமாள், மத்தூர் சக்தி, அந்தேரிப்பட்டி சக்கரவர்த்தி, கொடமாண்டப்பட்டி மலர்கொடி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், ஓசூர் பில்டர்ஸ், டெவலப்பர்ஸ் அசோசியேசன் உள்பட பலர் வரவேற்பு அளித்தனர்.