ஓசூரில் வட்டார போக்குவரத்து அலுவலக புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பூமி பூஜை நடைப்பெற்றது.
ஓசூரில் வட்டார போக்குவரத்து அலுவலக புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தற்போது தேன்கனிக்கோட்டை சாலையில் கூட்டு ரோடு அருகே வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு ஓசூர்- பாகலூர் ரோடு நல்லூர் சாலையில் புதிதாக அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.2 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்த அலுவலகத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கி பூஜைகள் செய்து பணியினை தொடங்கி வைத்தார். ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அசோகன் முன்னிலை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மற்றும் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் கே.நாராயணன், மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், ஓசூர் ஒன்றிய துணை செயலாளர் ஜெயராம், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கட்டிடப்பணிகளை தரமானதாகவும், விரைந்தும் முடித்திடுமாறு ஒப்பந்தக்காரர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com