காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

காசிமேட்டில் மீன் வாங்க நேற்று பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
Published on

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். பாறை, பூச்சி, கவளை உள்ளிட்ட சிறிய வகை மீன்களும், திருக்கை, வவ்வால், வஞ்சிரம் போன்ற பெரிய வகை மீன்களையும் பிடித்து வருகின்றனர்.

காசிமேடு மீன் என்றால் தனி ருசி என்பதால் தினமும் காசிமேடு மீன் விற்பனை செய்யும் இடத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து மீன்களை போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர். பெரிய வகை மீன்கள் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் புரட்டாசி மாதம் முடிந்து 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று அதிகாலை முதலே காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் மீன் வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் குவித்தனர். மீன் விலை சற்று அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் வகை, வகையான மீன்களை வாங்கிச் சென்றனர்.

புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையில் பெரும்பாலான பொதுமக்கள், மீன்கள் வாங்கி சாப்பிடுவது இல்லை. இதனால் கடந்த வாரம் அவ்வளவு கூட்டம் இல்லை. ஆனால் 2-வது வாரமான நேற்று அதிகளவில் பொதுமக்கள், வியாபாரிகள் மீன் வாங்கி சென்றதாக அங்கு மீன் விற்பவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com