கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சியில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
Published on

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் தெற்கு மாவட்டம் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெய லலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் கே.ஜி.பி.ஞானமுர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செழியன், மாவட்ட அவைத்தலைவர் முத்துரங்கன், மாவட்ட எம்.ஜி.ஆர். அணி செயலாளர் வஜ்ரவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பிரபு எம்.எல்.ஏ., கழக தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், கழக செய்தி தொடர்பாளர் இளந்தமிழ் ஆர்வலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பிரபு எம்.எல்.ஏ. பேசுகையில், மக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு இருந்த செல்வாக்கு தற்போது ஆட்சி செய்பவர்கள் மீது இல்லை. தமிழக மக்களுக்கு மக்கள் பணி செய்யவும், ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்றவும், கழகத்தையும் ஆட்சியையும் வழிநடத்த சசிகலா, டி.டி.வி. தினகரனால் மட்டுமே முடியும். தமிழக மக்கள் பயன்பெற, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்திட ஆட்சி மாற்றம் தேவை. எனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மாற்றி சசிகலா, டி.டி.வி. தினகரன் தலைமையில் கட்சி மற்றும் ஆட்சி அமைய வேண்டும். அப்போது தான் கட்சி ராணுவ கட்டுக்கோப்போடு செயல்படும் என்றார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் கனகவேலாயுதம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வக்கீல் சம்பத்குமார், மாவட்ட இணைச்செயலாளர்கள் செல்வி சின்னதுரை, சுசிலா ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் திருமணி, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக டி.டி.வி. தினகரன் அணியில் இணைந்து கள்ளக்குறிச்சிக்கு திரும்பிய பிரபு எம்.எல்.ஏ.வுக்கு வாழவந்தான்குப்பத்தில் மாவட்ட செயலாளர் கே.ஜி.பி. ஞானமூர்த்தி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரபு எம்.எல்.ஏ., அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர செயலாளர் கோவிந்தன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் மூர்த்தி, பழனிசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com