கம்பத்தில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட தனியார் தங்கும் விடுதிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கம்பம் நகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட தனி யார் தங்கும் விடுதிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கம்பத்தில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட தனியார் தங்கும் விடுதிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
Published on

கம்பம்,

கம்பம் நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி நகராட்சி கமிஷனர் சங்கரன் மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகி யோர் தலைமையில் காய்ச்சல் கண்காணிப்பு, டெங்கு கொசுப்புழு ஒழிப்பு, புகை மருந்து அடிக்கும் பணிகள், அபேட் மருந்து தெளிக்கும் பணி, குடிநீரில் குளோரி னேசன் செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மேலும் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் வைத்திருக்கும் வீடு, கடைகளின் உரிமையாளர் களுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டு, அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி கம்பம் காந்திநகர், நந்தகோபால்சாமி நகர், தியாகிவெங்கடாசலம் தெரு, காந்திஜி வீதி, வேலப்பர்கோவில் தெரு, பார்க்ரோடு, செக்கடி தெரு, புதுப்பள்ளி வாசல் தெரு, அரசமரம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகள், வணிகநிறுவனங்கள், தங்கும் விடுதி, அரசு அலுவலகங்கள், புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள், சிமெண்டு தொட்டிகள், குடங்கள், குளிர் சாதன பெட்டிகள், ஆட்டுக்கல் போன்றவற்றில் டெங்கு காய்ச் சலை பரப்பும் கொசுப் புழுக்களின் உற்பத்தி உள் ளதா? என கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று நடந்த ஆய்வின் போது கம்பத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டி, காலி பாட்டில்களில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த விடுதிக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகளை நன்கு மூடி வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com