கர்நாடகத்தில் உள்ள 30 மாவட்டங்களுக்கும்: பொறுப்பு மந்திரிகள் நியமனம் எடியூரப்பாவுக்கு பெங்களூரு நகர், ஆர்.அசோக்குக்கு பெங்களூரு புறநகர், மண்டியா ஒதுக்கீடு

கர்நாடகத்தில் உள்ள 30 மாவட்டங்களுக்கும் பொறுப்பு மந்திரிகளை கர்நாடக அரசு நியமித்து உத்தரவிட்டு உள்ளது. எடியூரப்பாவுக்கு பெங்களூரு நகர், ஆர்.அசோக்குக்கு பெங்களூரு புறநகர் மற்றும் மண்டியா மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் உள்ள 30 மாவட்டங்களுக்கும்: பொறுப்பு மந்திரிகள் நியமனம் எடியூரப்பாவுக்கு பெங்களூரு நகர், ஆர்.அசோக்குக்கு பெங்களூரு புறநகர், மண்டியா ஒதுக்கீடு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் இறுதியில் முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து 25 நாட்களுக்கு பிறகு அதாவது கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். மொத்தம் 34 பேர் கொண்ட மந்திரிசபையில் தற்போது முதல்-மந்திரி உள்பட 18 பேர் உள்ளனர். இந்த நிலையில் மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டு 28 நாட்களுக்கு பிறகு மந்திரிகளுக்கு 30 மாவட்டங்களின் பொறுப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜெகதீஷ் ஷெட்டர்

1. முதல்-மந்திரி எடியூரப்பா - பெங்களூரு நகரம்

2. துணை முதல்-மந்திரி (பொதுப்பணித்துறை) கோவிந்த் கார்ஜோள் - பாகல்கோட்டை, கலபுரகி

3. துணை முதல்-மந்திரி (உயர்கல்வி, தகவல், உயிரி தொழில்நுட்பம்) அஸ்வத் நாராயண் - ராமநகர், சிக்பள்ளாப்பூர்

4. துணை முதல்-மந்திரி (போக்குவரத்து) லட்சுமண் சவதி - பல்லாரி, கொப்பல்

5. கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா - சிவமொக்கா, தாவணகெரே

6. வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் - பெங்களூரு புறநகர், மண்டியா

7. தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் - உப்பள்ளி-தார்வார், பெலகாவி

சுரேஷ்குமார்

8. சுகாதாரம், குடும்ப நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு - ராய்ச்சூர், சித்ரதுர்கா

9. பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் -சாம்ராஜ்நகர்

10. வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா - மைசூரு, குடகு

11. சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி - சிக்கமகளூரு

12. போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை - உடுப்பி, ஹாவேரி

13. அறநிலையத்துறை, மீன்வளத்துறை மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி - தட்சிணகன்னடா

14. சட்டத்துறை மந்திரி மாதுசாமி - துமகூரு, ஹாசன்

எச்.நாகேஷ்

15. கனிமம், நில அறிவியல்துறை மந்திரி சி.சி.பட்டீல் - கதக், விஜயாப்புரா

16. கலால்துறை மந்திரி எச்.நாகேஷ் - கோலார்

17. பெண்கள், குழந்தைகள் நலத்துறை மந்திரி சசிகலா ஜோலே - உத்தர கன்னடா

18. கால்நடைத் துறை மந்திரி பிரபு சவான்- பீதர், யாதகிரி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com