கர்நாடகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தது

கர்நாடகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது என்று மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.
கர்நாடகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தது
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பூஜ்ஜிய நேரத்தில் கர்நாடகத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி, "சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா மற்றும் அபின் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல், சேகரித்து வைப்பது, அவற்றை விற்பது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இளைஞர்கள் இவற்றுக்கு அடிமையாவதை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

சட்டம் வெறும் காகிதத்தில் மட்டும் இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், அத்தகையவர்களை எல்லையை விட்டு வெளியேற்றும்படியும் போலீசாருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது கர்நாடகத்தில் குற்றங்களின் அளவு 6.7 சதவீதமாக இருந்தது. இதில் குற்றங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com