

கோவில்பட்டி:
கேவில்பட்டியில் மனைவி இறந்த விரக்தியில் தெழிலாளி தூக்கு பேட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
கோவில்பட்டி முத்து நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் வீரப்பெருமாள் என்ற ராஜூ (வயது47). இவரது மனைவி பொன்னுத்தாய் (42). இவர்கள் சாத்தூரில் ஒரு வீட்டில் தங்கி அங்கு உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தனர்.
இதற்கிடையில் பொன்னுதாய்க்கு உடல்நலம் பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. அவர் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
மனைவி சாவு
இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பொன்னுத்தாய் வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அன்று முதல் வீரப்பெருமாள் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்லாமல் கோவில்பட்டி முத்துநகரிலுள்ள வீட்டில் வந்து தங்கியிருந்தார்.
தற்கொலை
இந்நிலையில் நேற்று அதிகாலையில் வீரப்பெருமாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் சவுந்தரி மற்றும் அக்கம் பக்கத்தினர் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீரப்பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.