கிருஷ்ணகிரியில் அவசர கால செயல்பாட்டு மையம் கலெக்டர் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரியில் அவசர கால செயல்பாட்டு மையம் கலெக்டர் நேரில் ஆய்வு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை இன்னல், பேரிடர் மற்றும் அவசர கால உதவிகள் தேவைப்படும் போது பொதுமக்கள் உதவிகள் கேட்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட இயற்கை இடர்பாடுகளின் போது உதவிகள் கேட்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் அவசர கால செயல்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இதை 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

புயல், மழை, வெள்ளம், பூகம்பம், சூறாவளி, தீ விபத்து சாலை விபத்து போன்ற நேரங்களில் பொதுமக்கள் தங்களுக்கு உதவிகள் தேவைப்படும் போது கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப்பில் வந்த புகார்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, தனி தாசில்தார் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com