குமாரபாளையத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்; முதியவர் கைது

குமாரபாளையத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்; முதியவர் கைது
Published on

குமாரபாளையம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தாய், தந்தை இல்லாத 13 வயது சிறுமி தன் பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தாள். இந்த சிறுமி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். பாட்டி திருமண மண்டபங்களில் சமையல் வேலை செய்து சிறுமியை வளர்த்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 60) என்பவரும், சிறுமியின் பாட்டியுடன் சமையல் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மாலை 6 மணியளவில் பாட்டி வீட்டில் இல்லை என்பதை அறிந்து வந்த பெருமாள், சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய பாட்டியிடம் நடந்த விவரத்தை சிறுமி சொன்னாள். இது குறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாட்டி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பெருமாளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை குமாரபாளையம் அருகே கோட்டைமேடு நான்கு ரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் பெருமாள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரோந்து பணியில் இருந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தேவி, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியஜான்சி ஆகியோர் அங்கு சென்று பெருமாளை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com