குன்றத்தூரில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விபரீதம்

குன்றத்தூரில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மதுவில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூரில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விபரீதம்
Published on

பூந்தமல்லி,

குன்றத்தூர் மேலாண்டை தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 30). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், பூங்காவனம் தினமும் குடித்துவிட்டு கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் பூங்காவனம் வேலைக்கு செல்லாமல் இருந்ததை மேகலா கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பூங்காவனம் வெளியே சென்று மது வாங்கி அதில் விஷத்தை கலந்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்ததும், தான் விஷமருந்தி விட்டதாக மனைவி மேகலாவிடம் கூறி வாந்தி எடுத்தார்.

இதையடுத்து பதறிப்போன மேகலா கணவரை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூங்காவனம் இறந்து போனார்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com