இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம்

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம்
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மக்கள் வீட்டு விசேஷங்களுக்கு வெளியூர்களில் சத்திரங்களை தேடி செல்ல வேண்டி உள்ளது. இந்த பகுதியில் ஊராட்சி சார்பில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்டி தரவேண்டும் என இருங்காட்டுக்கோட்டை ஊராட்சி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி முகமை பெரு நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட இருங்காட்டுக்கோட்டை போலிச்சியம்மன் கோவில் அருகே இடம் தேர்வு செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணி தொடங்கப்பட்டது.

கட்டுமான பணி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அஸ்திவாரம் போட்ட இடத்தில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மக்கள் வரி பணம் இது போன்று வீணாக கூடாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சமுதாய நலக்கூட பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com