உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி - அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி

பண்ருட்டி அருகே அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்குமாரமங்கலத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி - அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி
Published on

நெல்லிக்குப்பம்,

கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. நாங்கள் தி.மு.க. களத்தில் இருப்பதாக நினைப்பது இல்லை.

ஆகையால் அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி. தி.மு.க. தேர்தலை பார்த்து அஞ்சுகிற இயக்கமாக உள்ளது. வாக்குகள் எண்ணுவதை தள்ளி வைப்பதற்கான முயற்சி அவர்களுக்கு சாதகமாக இல்லை. மக்கள் பணியில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு முழுமையாக செயல்பட்டு வருகிறது.

இந்த அரசு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு போன்ற திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இதனால் இந்தியாவில் தமிழகம் நிர்வாக திறனில் முதலிடம் பெற்றுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com