மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
Published on

மதுரை,

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியத்தில் வேரூன்றி நவீன மதுரையை நோக்கி என்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., வேட்பாளர் ராஜ்சத்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். முன்னதாக தமுக்கம் தமிழன்னை சிலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த பேரணி தமிழச்சங்கத்தில் சென்ற போது பாரம்பரிய கலைஞர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோர்ட் அருகே உள்ள தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவித்து தமிழ் கலாச்சாரத்தையும:, பாரம்பரியத்தையும் காக்க அனைவரும். உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் இலந்தைகுளம் எல்காட் பகுதியில் பேரணி நிறைவடைந்தது.

பேரணியின் போது அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:

சித்திரை திருநாள் தான் ஆண்டின் முதல் நாளாக கொண்டாடப்படவேண்டும் என்று நமது முன்னோர்கள் வகுத்தனர். அதனை ஜெயலலிதா சுட்டி காட்டி, நமது பராம்பரியத்தையும் பண்பாட்டையும் மீட்டெடுத்தார்கள். ஜெயலலிதாவின் நினைவை நனவாக்கும் வகையில் சித்திரை திருநாள் கொண்டப்பட்டு தமிழன்னை சிலை, தமிழ் நினைவு சின்னங்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் நினைவிடங்களில் மரியாதை செய்தோம். மதுரையில் தமிழன்னை சிலை அமைப்பது தொடர்பாக முதல்அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்ததாக மதுரையில் சர்வதேச உலகத்தமிழ் மாநாடு நிச்சயம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com