மதுரவாயலில் பெண் தற்கொலை போலீசுக்கு தெரியாமல் உடலை திண்டிவனம் கொண்டு சென்ற கணவர்

மதுரவாயலில் குடும்பத்தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய திண்டிவனம் கொண்டு சென்ற உடலை போலீசார் மீட்டு, அவரது கணவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
மதுரவாயலில் பெண் தற்கொலை போலீசுக்கு தெரியாமல் உடலை திண்டிவனம் கொண்டு சென்ற கணவர்
Published on

பூந்தமல்லி,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). சென்னை மதுரவாயல், நூம்பல் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி சென்டிரிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி என்கிற முனியம்மாள் (23). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

மது குடிக்கும் பழக்கம் உடைய மணிகண்டன் நேற்று முன்தினம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து முனியம்மாள் கேட்டபோது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் முனியம்மாளை அடித்து விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது முனியம்மாள் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை உடைத்து உள்ளே சென்று முனியம்மாளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் முனியம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com