மணப்பாறை தொகுதியில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் நம்பிக்கை

சூழ்ச்சிகள் ஒருபோதும் வென்றதில்லை, மணப்பாறை தொகுதியில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் நம்பிக்கை.
மணப்பாறை தொகுதியில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் நம்பிக்கை
Published on

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மருங்காபுரி ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பெண்கள் திரளாக நின்று வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் இரட்லை இலைக்கு வாக்கு கேட்டு அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் மணப்பாறை தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா மினி கிளினிக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. நீர்நிலைகள் எல்லாம் தூர் வாரப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மணப்பாறை தொகுதியில் ரூ.33 கோடி வரை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே மணப்பாறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும் கூட திட்டங்களே செய்யாதது போன்று ஒரு பொய்யை பரப்பி எப்படியாவது அ.தி.மு.க.வை வீழ்த்தி விட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த இயக்கத்தை யாராலும், எப்போதும் அழித்து விட முடியாது. இரட்டை இலை என்பது மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள சின்னம். இதனால் தான் மணப்பாறை தொகுதியில் அ.தி.மு.க. தொடர்ந்து மகத்தான வெற்றியை பெற்று வருகிறது. சூழ்ச்சிகளை முறியடித்து இம்முறையும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்யும். மக்களாகிய நீங்கள் அனைவரும் சிந்தித்து வாக்களித்திட வேண்டும் என்று பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com