

மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று துவரங்குறிச்சியில் பூதநாயகி அம்மன் கோவில் அருகே பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து நகர் பகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் இன்னும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக நமது கழகம் அறிவித்துள்ளது. இந்த ஆட்சியைப் பொறுத்தவரை சொன்ன திட்டங்களை மட்டுமின்றி சொல்லாத பல நல்ல திட்டங்களையும் மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றனர். ஆகவே அ.தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் வர வேண்டும். அதற்காக மணப்பாறை தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி தர வேண்டும். இன்னும் சொல்லப்போனால் வறண்ட பகுதியாக மணப்பாறை தொகுதி உள்ளது. ஆகவே பொன்னணியாறு அணைக்கு காவிரி குடிநீரை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பையும் நமது முதல்-அமைச்சர் வெளியிட்டு திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது. மாயனூரில் இருந்து பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு காவிரி நீரை கொண்டு செல்லப்படும். அதன்மூலம் விவசாயிகளின் நலன்காக்கின்ற அரசாக அதிமுக அரசு எந்நாளும் இருக்கும்.
ஏனென்று சொன்னால் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் நமது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆகவே விவசாயிகள் நிலையை முழுமையாக அறிந் தவர் என்பதால் விவசாயிகள், மகளிர் என அனைவருக்கும் அடுக்கடுக்கான திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. மக்களே பொய்யையும், புரட்டையும் ஒருபோதும் நம்பி
ஏமார்ந்து விட வேண்டும். இந்த முறையும் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.