மண்ணச்சநல்லூர் தொகுதியில் கிராமம் கிராமமாக தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் தீவிர ஓட்டு வேட்டை

பெரிய கொடுந்துறை, சின்ன கொடுந்துறை ராமகிரி பட்டி, வீரமணிபட்டி, சின்ன காலனி, நாச்சிபட்டி உள் ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் தீவிர வாக்கு சேகரித்தார்.
மண்ணச்சநல்லூர் தொகுதியில் கிராமம் கிராமமாக தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் தீவிர ஓட்டு வேட்டை
Published on

திருச்சி,

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.கதிரவன் போட்டியிடுகிறார். தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் பெரிய கொடுந்துறை, சின்ன கொடுந்துறை ராமகிரி பட்டி, வீரமணிபட்டி, சின்ன காலனி, நாச்சிபட்டி உள் ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் தீவிர வாக்கு சேகரித்தார். குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம், மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையை கூறி வாக்கு சேகரித்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் 50 பேர் அக்கட்சியிலிருந்து விலகி வேட்பாளர் எஸ்.கதிரவன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதனை தொடர்ந்து கொடுந்துறை கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் அவர் வாக்கு சேகரித்தார்-. வாக்கு சேகரிக்க வந்த கதிரவனை அப்பகுதி மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தி-.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com