நாகையில், கோடை வெயில் தீவிரம்: தர்பூசணி விற்பனை மும்முரம் கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது

நாகையில் காடை வெயில் தீவிரம் அடைந்து உள்ளதால் தர்பூசணி விற்பனை மும்முரம் அடைந்து உள்ளது. ஒரு கிலோ தர்பூசணி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாகையில், கோடை வெயில் தீவிரம்: தர்பூசணி விற்பனை மும்முரம் கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது
Published on

நாகப்பட்டினம்,

நாகையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். கோடை வெயில் தீவிரம் அடைந்து உள்ளதால் நாகையில் பல்வேறு இடங்களில் புதிதாக குளிர்பான கடைகள் தொடங்கப்பட்டு உள்ளன. நாகையில் தர்பூசணி, நீர் மோர், சாத்துக்குடி ஜூஸ், இளநீர், நுங்கு விற்பனை அதிகரித்து உள்ளது.

ரூ.20-க்கு விற்பனை

குறிப்பாக நாகையில் தர்பூசணிவரத்து அதிகரித்துள்ளது. தர்பூசணி பழங்கள் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. காடம்பாடி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஒரு கிலோ தர்பூசணி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கப்படுகிறது. இந்த பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com