நத்தம் தொகுதியில் தொலைநோக்கு சிந்தனையுடன் மின்சார பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன நத்தம் விசுவநாதன் பேச்சு

நத்தம் சட்டமன்ற தொகுதி யில் தொலைநோக்கு சிந்தனையுடன் மின்சார பணிகள் செயல்படுத்த பட்டுள்ளன என நத்தம் விசுவநாதன் பேசினார்.
நத்தம் தொகுதியில் தொலைநோக்கு சிந்தனையுடன் மின்சார பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன நத்தம் விசுவநாதன் பேச்சு
Published on

கோபால்பட்டி,

நத்தம் சட்டமன்ற தொகுதி யில் அ.தி.மு.க.வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் போட்டியிடு கிறார். அவர் அந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று திண்டுக்கல்லை அடுத்த அடியனூத்து, தோட்டனூத்து ஊராட்சிக்குட்பட்ட ஆர்.எம்.டி.சி.காலனி, நல்லம நாயக்கன்பட்டி, தோட்ட னூத்து, ரெட்டியபட்டி, இரண்டலப்பாறை, பொன்ன கரம், யாகப்பன்பட்டி, வேட பட்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்குசேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.ஆட்சியில் இருண்டு கிடந்த தமிழகத்தில் அப்போது நடைபெற்ற தேர்தலில் உங்கள் வாக்கு களால் வெற்றிபெற்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவினால் மின் துறை அமைச்சராக நியமிக்கப் பட்ட நான் ஜெயலலிதாவின் ஆலோசனையின் பேரிலும் கடும் உழைப்பாலும் மின் தடையை நீக்கி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி னேன். நத்தம் தொகுதியை பொருத்தவரை தொலை நோக்கு சிந்தனையுடன் துணை மின் நிலையங்கள், டிரான்ஸ்பார்ம்கள் தரம் உயர்த்தப்பட்டன அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான மின் வசதியை நத்தம் தொகுதி யில் உருவாக்கி உள்ளேன்.

மேலும் நத்தத்திற்கென தனியாக ரூ.450 கோடி மதிப்பில் காவிரிகூட்டு குடிநீர் சாதனை திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சாலை, மருத்துவம், பள்ளிகள், என அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நம்மிடையே இல்லை என்ற கவலை இருந்தாலும் நமது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் நான் உட்பட அவரிடம் அமைச்சர்களாக இருந்தபோது பெற்ற பயிற்சி இன்று சிறப்பாக எங்களை செயல்பட வைக்கிறது.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டுள்ள 6 சிலிண்டர், பெண்களுக்கு உதவித் தொகை, சோலார் அடுப்பு, வாசிங்மெசின், 150 யூனிட் மின்சாரம், கேபிள் இலவசம் என அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் மீண்டும் மறக்காமல் அனைவரும் இரட்டை இலைக்கு வாக் களியுங்கள் அடுத்த 5 ஆண்டுகள் இன்பமான வாழ்வை அனுபவியுங்கள் என நத்தம்விசுவநாதன் பேசினார்.

அ.தி.மு.க.மாநில ஜெய லலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் யூசுப்அன்சாரி, பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜான்கென்னடி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கோபாலகிருஷ்ணன்,கிழக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் உதய குமார், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் மகாராஜன்,மாவட்ட பிரதிநிதி நாராயணன், உள்பட அ.தி.மு.க.கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com