நத்தம் தொகுதியில் கல்வி,தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் செயல் வீரர்கள் கூட்டத்தில் இ.பெரியசாமி பேச்சு

நத்தம் தொகுதிக்கு கல்வி, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப் படும் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் இ.பெரியசாமி பேசினார்.
நத்தம் தொகுதியில் கல்வி,தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் செயல் வீரர்கள் கூட்டத்தில் இ.பெரியசாமி பேச்சு
Published on

நத்தம்,

நத்தம் சட்டமன்ற தொகுதி யில் தி.மு.க.வேட்பாளராக தற்போதய சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம் போட்டியிடுகிறார் இதற்காக கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இதில் தி.மு.க. மேற்கு மாவட்ட செயலா ளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். வேலுச்சாமி எம்.பி. நத்தம் ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கள் பழனிச்சாமி, ரத்தினக் குமார், தர்மராஜன், மோகன், நெடுஞ்செழியன் ஆகியோர் வரவேற்றனர்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரிய சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:--

தமிழக மக்கள் 10 ஆண்டு காலம் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் அதற்கு இந்த தேர்தல் விடிவு காலம். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப் பேற்பது உறுதி. அதேபோல் ஆண்டிஅம்பலம் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. நத்தம் தொகுதியில் கல்வி தொழில் வளர்ச்சி இல்லை. வருகிற தி.மு.க.ஆட்சியில் நத்தம் தொகுதியில் கல்வி, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து வளர்ச்சி பணிகளும் செய்யப்படும். இது பணத் திற்கும், கொள்கைக்கும் இடையே நடை பெறும் போட்டி.இதில் நமது ஆண்டிஅம்பலம் பதிவான வாக்குகளில் 60 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெறுவது உறுதி என அவர் பேசினார். முடிவில் நத்தம் நகர செயலாளர் முத்துக்குமாரசாமி நன்றி தெரிவித்தார்.

தி.மு.க. மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர் பதுருஸ்மான், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அப்துல் கனிராஜா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வ ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாவட்ட செயலா ளர் சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் ரோக்கஸ் வளவன் உள்பட தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க கிழக்கு மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் ராஜ கோபால், அடியனூத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அ.தி.மு.க சிறு பான்மை பிரிவு நிர்வாகியுமான மாயாண்டி ஜோசப் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி இ.பெரியசாமி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com