ஊட்டி கோர்ட்டுகளில் கை கழுவ வசதியாக தானியங்கி கிருமி நாசினி எந்திரம்

ஊட்டி கோர்ட்டுகளில் கை கழுவ வசதியாக தானியங்கி கிருமி நாசினி எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி கோர்ட்டுகளில் கை கழுவ வசதியாக தானியங்கி கிருமி நாசினி எந்திரம்
Published on

ஊட்டி,

ஊட்டியில் உள்ள மாவட்ட கோர்ட்டு, மகளிர் கோர்ட்டு, வக்கீல் சங்க அலுவலகம் ஆகிய 3 இடங்களில் கை கழுவ வசதியாக தானியங்கி கிருமி நாசினி வழங்கும் எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் பயன்பாட்டை முதன்மை நீதிபதி வடமலை நேற்று தொடங்கி வைத்தார். அந்த எந்திரத்தில் சென்சார் பொருத்தப்பட்டு இருக்கிறது. கைகளை கீழ்பகுதியில் கொண்டு சென்றதும் கிருமி நாசினி வெளியே வரும். அதில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய டேங்க் உள்ளது. அந்த எந்திரம் மின்சாரம் மூலம் இயங்குகிறது. நிகழ்ச்சியில் மகளிர் கோர்ட்டு நீதிபதி முரளிதரன், சார்பு கோர்ட்டு நீதிபதி புகழேந்தி மற்றும் வக்கீல் சங்க தலைவர் பிரகாஷ் பாபு, அரசு வக்கீல்கள் மாலினி, தேவராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com