பரமக்குடி தொகுதியில் அ.தி.மு.க.வின் அலை வீசுகிறது வெற்றி உறுதி அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகர் பேச்சு

பரமக்குடி நகரில் முக்கிய அமைப்புகள், மற்றும் பொதுமக்களையும் சந்தித்து பொன்னாடை அணிவித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
பரமக்குடி தொகுதியில் அ.தி.மு.க.வின் அலை வீசுகிறது வெற்றி உறுதி அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகர் பேச்சு
Published on

ராமநாதபுரம்,

பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகர் கமுதி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களிலும், பரமக்குடி நகரில் முக்கிய அமைப்புகள், மற்றும் பொதுமக்களையும் சந்தித்து பொன்னாடை அணிவித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார், அப்போது அவர்கள் வேட்பாளர் சதன் பிரபாகருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு அவர்கள் மத்தியில் வேட்பாளர் சதன் பிரபாகர் பேசியதாவது.

பரமக்குடி தொகுதியானது அ.தி.மு.க.வின் தொகுதி யாகும். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே இந்த தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்தின் மீது பற்று உடையவர்கள். அதற்கு கை மாறாக அ.தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் இங்கு எந்தவித பிரச்சனைகளும் இன்றி மக்களும், வியாபாரிகளும் அமைதியுடன் வாழ சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டு வருகிறது. வணிகர்கள், வியாபாரிகள், நிறைந்த பகுதியாகும். தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்க ளித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

பரமக்குடி தொகுதியில் அ.தி.மு.க.வின் அலை வீசுகிறது. எனது வெற்றி உறுதி செய்யப் பட்டுவிட்டது. மீண்டும் நான் சட்டமன்ற உறுப்பினரானவுடன் தன்னி றைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன். ஜெயலலி தாவை இழந்து தாயில்லாத பிள்ளைகளாக நாங்கள் தவிக்கிறோம். பரமக்குடி தொகுதி மக்கள் எங்களுக்கு தாயாக இருந்து இந்த தேர்தலில் எங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். சோதனைக் காலங்களில் மக்களை வந்து எட்டிப் பார்க்காத தி.மு.க. வினர் தேர்தலுக்காக உங்களிடம் வருகின்றனர். அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண் டும் . இவ்வாறு பேசினார். அவருடன் அ.தி.மு.க .நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வாக்குகள் சேகரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com