பெரம்பலூரில் வேப்பமரங்களை வெட்டிய வணிக வளாக உரிமையாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

பெரம்பலூரில் வேப்பமரங்களை வெட்டிய தாக வணிக வளாக உரிமையா ளர்கள் 3 பேருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூரில் வேப்பமரங்களை வெட்டிய வணிக வளாக உரிமையாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூரில் வெங்கடேச புரம் பிரதான சாலை பகுதி வணிக வளாகங்கள், கடைகள், மால்கள் என வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நிழல் தரும் வகையில் மரங்கள் வளர்க்கப் பட்டுள்ளன. இந்நிலையில் கட்டிட உரிமையாளர்கள் 3 பேர், தங்களது வணிக வளாகங்கள் முன்பு வேப்ப மரங்கள் இடைஞ்சலாக இருப்பதாக கூறி 2 நாட்களுக்கு முன்பு கூலி ஆட்களை வைத்து, 3 வேப்ப மரங்களை வெட்டினர். இது குறித்து பெரம்பலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் களுக்கு பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மூலம் புகார்கள் சென்றன. இது பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோட்ட பொறியாளர் சக்தி வேல், உதவி கோட்ட பொறி யாளர் பாபுராமன் மற்றும் உதவி பொறியாளர் ஜெயலட்சு மிக்கு அறிவுரை வழங்கி னார்.

இதைத்தொடர்ந்து வெங்கடேசபுரத்திற்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், 3 கட்டிடங்கள் முன்பு இருந்த வேப்பமரங்கள் வெட்டப்பட்டிருந்ததையும், அதன் கிளைகளை அகற்றப் பட்டிருந்ததையும் பார்த்தனர். பின்பு கட்டிட உரிமையாளர் களிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக, வணிக வளா கங்களின் உரிமையாளர்கள் 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வெட்டப்பட்ட மரங்களின் கிளைகளை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை நெடுஞ்சாலைத் துறை கணக்கில் செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட் டது. மேலும் பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள மரங்களை வெட்டி சேதப்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும் என்று கோட்ட பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே பெரம்பலூர் நகரில் ஏற்கனவே வளர்ந்துள்ள மரங்களை, வர்ணங்களை கொண்டு எண்கள் எழுதி பட்டியலிட நெடுஞ்சாலைத்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் முன்வர வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com