பெரம்பலூர் மாவட்டம், மாணவர்கள் ஆபத்தான பயணம்

கிராமங்களை சுற்றி உள்ள பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள், பஸ்சில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், மாணவர்கள் ஆபத்தான பயணம்
Published on

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், திட்டக்குடி-அரியலூர் சாலையில் கோவில்பாளையம், துங்கபுரம், புதுவேட்டக்குடி மருதையான் கோவில், வரிசைப்பட்டி, கொளப்பாடி, பெரிய வெண்மணி, நல்லறிக்கை ஆகிய குக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களை சுற்றி உள்ள பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் குன்னம் மற்றும் அரியலூருக்கு வர வேண்டி உள்ளது. இந்த பகுதிகளுக்கு போதுமான அரசு பஸ் வசதியும் இல்லை. தனியார் பஸ்கள் எண்ணிக்கையும் குறைவுதான்.

இதனால் தினமும் காலையில் குன்னம் மற்றும் அரியலூரில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை.

இதேபோல் தனியார் பஸ்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதையடுத்து மாணவர்கள் தனியார் பஸ்சில் கூட்டத்தை பொருட்படுத்தாமல் செல்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் இல்லை என்றால் விடுமுறை எடுத்து பள்ளி, கல்லூரிக்கு செல்லாமல் இருக்க வேண்டும். இதனால் மாணவர்கள் தனியார் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், பஸ்சின் படிக்கெட்டில் தொங்கியவாறும், பஸ்சின் மேற்கூரைமேல் ஏறி அமர்ந்தும், பஸ்சின் பின் புறம் உள்ள ஏணியிலும் தொங்கி கொண்டு பாதுகாப்பற்ற முறையில் உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணம் செய்கிறார்கள். இதேபோல் மாலையிலும் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடுகளுக்கு மாணவர்கள் இப்படிதான் பஸ்சில் ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். பஸ்சில் இருந்து கீழே விழுந்து பல மாணவர்கள் கை, கால் உடைந்து படுகாயமடைந்த சம்பவமும் நடந்து வருகிறது.

மாணவர்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறையும் எந்த நடவடிக்கையும் இது நாள் வரைக்கும் எடுக்க வில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பான பயணத்துக்கு எந்த முயற்சியும் எடுக்காத பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் உடனே மாணவர்களுக்கு போதிய பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com