பெரம்பலூரில் உள்ள பள்ளிகளில் யோகா தின நிகழ்ச்சி

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பப்ளிக் பள்ளியில் உலக யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூரில் உள்ள பள்ளிகளில் யோகா தின நிகழ்ச்சி
Published on

பெரம்பலூர்,

பள்ளி தாளாளர் ராம்குமார் தலைமை தாங்கி பேசும்போது, 7 வயது நிறைந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதிற்கேற்றபடி உடற்பயிற்சியுடன் யோகா செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நிம்மதியாக வாழலாம் என்று கூறினார். பள்ளி முதல்வர் சிவகாமி முன்னிலை வகித்தார். யோகா ஆசிரியைகள் மகாலட்சுமி மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணைமுதல்வர் சாரதா, ஆசிரியைகள் ஹேமா, சந்திரோதயம் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் பெரம்பலூரில் உள்ள ஹேன்ஸ் ரோவர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் அகில உலக யோகா தின நிகழ்ச்சி பள்ளி முதல்வர் கயல்விழி தலைமையில் நடந்தது. இதில் யோகா நிபுணர் கலியமூர்த்தி யோகா பயிற்சியின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் கடினமான யோகாசனப் பயிற்சிகளை எளிதாக செய்து காண்பித்தனர். ஓவிய ஆசிரியர் ரவிக்குமார் கவிதை வாசித்து அறிமுக உரையாற்றினார்.

விழா ஏற்பாடுகளை தந்தை ரோவர் கல்விக்குழும தலைவர் ரோவர் வரதராஜன், துணைத்தலைவர் ஜான் அசோக் மற்றும் தூய யோவான் சங்க அறக்கட்டளை புரவலர் மகாலட்சுமி மேற்பார்வையில் பள்ளி துணை முதல்வர் அந்தோணி வின்சென்ட்ராஜ் மற்றும் ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com