பெரியகுளத்தில் வராகநதி தூய்மைப்படுத்தும் பணியை ஆய்வு செய்த ரவீந்திரநாத் எம்.பி.

நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்றும், விவசாய தேவைகளுக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்றும் தேனி தொகுதி எம்.பி.யான ரவீந்திரநாத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெரியகுளத்தில் வராகநதி தூய்மைப்படுத்தும் பணியை ஆய்வு செய்த ரவீந்திரநாத் எம்.பி.
Published on

பெரியகுளம்,

பெரியகுளத்தில் ஓடும் வராக நதியில் கழிவுநீர் கலப்பதோடு, குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்றும், விவசாய தேவைகளுக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்றும் தேனி தொகுதி எம்.பி.யான ரவீந்திரநாத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வராக நதியில் உள்ள குப்பைகளை அகற்றி, பொக்லைன் எந்திரம் மூலம் கரை பகுதியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரவீந்திரநாத் எம்.பி. வராகநதி ஓடும் அழகர்சாமிபுரம் பாலம், புதுப்பாலம், ஆடுபாலம், மாரியம்மன் கோவில் படித்துறை மற்றும் தண்டுபாளையம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். மேலும் மாரியம்மன் கோவில் படித்துறையில் ஆற்றுக்குள் இறங்கி பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் அங்கிருந்த பொக்லைன் எந்திரத்தில் ஏறி தூய்மைப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார். மேலும் இறைச்சி கடைகளில் இருந்து ஆற்றுக்குள் வரும் கழிவுநீர் குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், சின்னமனூர் ஒன்றிய அ.தி. மு.க. செயலாளர் விமலேஸ்வரன், நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன், கீழவடகரை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் முத்துவேல் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர் தனது அலுவலகத்தில் மாவட்ட அதிகாரிகளுடனும், ஒன்றிய, பேரூராட்சி அதிகாரிகளுடனும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com