பாளையங்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர் கடையம் அருகே அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவர் தற்போது பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், சுமதி தீக்குளிக்க காரணமாக இருந்த அதிகாரியை கைது செய்யக்கோரி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் நெல்லை மாவட்ட பிரிவு சார்பில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில செயலாளர் டெய்சி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், சுமதி தீக்குளிக்க காரணமாக இருந்த அதிகாரியை கைது செய்ய வேண்டும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சுமதிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும். தற்கொலைக்கு முயற்சி செய்த சுமதியின் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பாக்கியம், ஜெகராபாத்திமா, சாரதாபாய், ஜெயக்கொடி உள்பட மாநிலம் முழுவதும் இருந்து சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, சங்க நிர்வாகிகள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுமதியை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com