பாளையங்கோட்டையில், போலீஸ் பணிக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு

பாளையங்கோட்டையில் போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நேற்று நடைபெற்றது.
பாளையங்கோட்டையில், போலீஸ் பணிக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு
Published on

நெல்லை,

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் துறையில் இரண்டாம் நிலை போலீசாராக பணியில் சேருவதற்கான போட்டித்தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 15 நாட்களாக இந்த தேர்வு நடைபெற்றது. நேற்று முன்தினத்துடன் உடல் தகுதி தேர்வு நடைபெற்று முடிந்தது. அதில் 1,000 இளைஞர்களும், 183 பெண்களும் தேர்ச்சி பெற்றனர்.

இவ்வாறு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக அதிகாலையிலேயே இளைஞர்கள் ஆயுதப்படை மைதானத்தில் குவிந்தனர். அவர்களது கல்வி, சாதி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன. இன்று (திங்கட்கிழமை) 183 பெண்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com