

பொன்னேரி,
பொன்னேரியில் மதுபாட்டில்களில் போதை மாத்திரை கலந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொன்னேரி பகுதியில் உள்ள பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் ஸ்டிக்கர்கள் இல்லாத மதுபாட்டில்களில் போதை மாத்திரைகளை கலந்து மதுவில் கலந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மதுவில் போதை மாத்திரைகளை கலந்து விற்பனை செய்த பொன்னேரி ஹரிஹரன் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 28), ரெயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்த அருள்ஜோதி (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.