பூந்தமல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

பூந்தமல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை.
பூந்தமல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
Published on

பூந்தமல்லி,

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட குடியிருப்போர் நலச்சங்கம், வியாபாரிகள் நலச்சங்கம், வழியாக வாகனங்களில் ஒலிபெருக்கி மூலமாகவும் வாட்ஸ்-அப் செயலிகள் மூலமாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் நகராட்சி அலுவலகம் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு செல்கின்றனர்.

பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com