பொத்தேரியில் பல்கலைக்கழக ஊழியர், மாணவர்களை தாக்கி 4 மடிக்கணினிகள் திருட்டு

பொத்தேரியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
பொத்தேரியில் பல்கலைக்கழக ஊழியர், மாணவர்களை தாக்கி 4 மடிக்கணினிகள் திருட்டு
Published on

வண்டலூர்,

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகதீஷ் (வயது 22), இவர் பொத்தேரியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரியும் சீனிவாசன் (21), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும் கார்த்திக் (21), முகமது ரிஷாத் (22), பிரகாஷ் (22) உள்பட 5 பேரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மர்மநபர்கள் 2 பேர் இவரது அறையின் கதவை தட்டி உள்ளனர். அப்போது தூங்கிக்கொண்டிருந்த பிரகதீஷ் கதவை திறந்து பார்த்தபோது அவர்கள் இருவரும் கையில் வைத்திருந்த கிரிக்கெட் மட்டையால் பிரகதீஷை ஓங்கி அடித்தனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டதும் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 4 பேரும் எழுந்து பார்த்தனர். அவர்களையும் மர்ம நபர்கள் கிரிக்கெட் மட்டையால் தாக்கி கத்தி முனையில் மிரட்டி அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், 4 மடிக்கணினிகள் போன்றவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து பிரகதீஷ் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com