பெரம்பலூரில் இன்று மின் நிறுத்தம்

பெரம்பலூரில் இன்று (சனிக்கிழமை) மின் சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பெரம்பலூரில் இன்று மின் நிறுத்தம்
Published on

பெரம்பலூர்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் டவுன் பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், பீல்வாடி, பாலம்பாடி, அசூர், சிறுகுடல், சித்தளி, அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, இந்திராநகர், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com