தனியார் நிறுவன ஊழியர்கள் 6 பேருக்கு அடி-உதை

முன்விரோதத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 6 பேருக்கு அடி-உதை விழுந்தது. இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்கள் 6 பேருக்கு அடி-உதை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த குத்தம்பாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த நீலகண்டபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 22) மற்றும் கனகம்மாசத்திரத்தை சேர்ந்த மோகனசுந்தரம் (19), சரத்குமார்(22), விக்னேஷ்(22), திருத்தணியை சேர்ந்த ராஜ் (18), சூர்யா (24) ஆகியோர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் குப்பையை தொட்டியில் போடுவதில் தகராறு ஏற்பட்டு கார்த்திக்கும் அதே பகுதியில் உள்ள சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் உட்பட மேற்கண்ட ஊழியர்கள் 6 பேரும் அந்த தனியார் நிறுவன பஸ்ஸில் திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

குத்தம்பாக்கம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அந்த பஸ்ஸை வழிமறித்த 14 பேர் கொண்ட கும்பல் மேற்கண்ட தனியார் நிறுவன ஊழியர்கள் 6 பேரை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து கார்த்திக் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் தலைமறைவாக உள்ள 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் களை தேடி வருகின்றனர்.

அதே போல திருவள்ளூரை அடுத்த வெள்ளவேட்டில் தனியார் நிறுவனம் உள்ளது. அங்கு கோவூர் சத்யாநகரை சேர்ந்த பிரகாஷ் (29) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் பணியை முடித்து விட்டு வெள்ளவேடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரியும் அதிகத்தூரை சேர்ந்த ராகுல், அவரது நண்பர்களான சின்னராசு, சரவணன் ஆகிய 3 பேரும் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரகாஷை வழிமறித்து அவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து அவர் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் தப்பியோடிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com