புதுவையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பூர்வா கார்க் ஆலோசனை நடத்தினார்.
புதுவையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
Published on

புதுச்சேரி,

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. வருகிற 26-ந் தேதி மாலை மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் யாஸ் புயலை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், புயலை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக புதுவையில் உள்ள அனைத்து கொரோனா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளை சரியாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும். புயலால் மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் தயார் நிலையில் இருக்க வேண்டும், அதற்கு தேவையான டீசல் உள்ளிட்டவைகளை இருப்பு வைத்திருக்கவேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com