புள்ளம்பாடி ஒன்றியத்தில் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் தீவிர ஓட்டு வேட்டை

போக்குவரத்து வசதி, அனைத்து கிராமங்களுக்கும் சமுதாயக்கூடம், உணவுக்கூடம், புள்ளம்பாடி பகுதியில் பருத்தி, மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைய பாடுபடுவேன்.
புள்ளம்பாடி ஒன்றியத்தில் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் தீவிர ஓட்டு வேட்டை
Published on

கல்லக்குடி,

புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர், மால்வாய், சாதூர்பாகம், எம். கண்ணனூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைபட்டி, கல்லகம், கீழரசூர், ஆமரசூர், தென்னரசூர் ஆகிய கிராமங்களில் லால்குடி தொகுதி அ.தி.மு.க. கூட்டணி த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், லால்குடி தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று அரசின் நலத்திட்ட உதவிகளையும், துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகளையும் முறையாக செய்யவில்லை. எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். 15 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்ற லால்குடி தொகுதியை மாநிலத்திலேயே முதன்மை சட்டமன்ற தொகுதியாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை நான், மேற்கொள்வேன்.

போக்குவரத்து வசதி, அனைத்து கிராமங்களுக்கும் சமுதாயக்கூடம், உணவுக்கூடம், புள்ளம்பாடி பகுதியில் பருத்தி, மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைய பாடுபடுவேன். மேலும் தொகுதியின் அனைத்து அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகளும் தனியார் நிறுவனங்கள் மூலம் நலத்திட்ட உதவிகளும் அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க பாடுபடுவேன் என்று எம்.கண்ணனூர், ஒரத்தூர் கிராமங்களில் 100 நாள் வேலை செய்யும் பெண்களிடம் சென்று முறையான கொள்ளிடம் கூட்டு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என பேசினார். உடன் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், ராஜாராம், நகர செயலாளர்கள் கல்லக்குடி பிச்சைபிள்ளை, புள்ளம்பாடி ஜேக்கப்அருள்ராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வமேரி, ஊராட்சி தலைவர்கள் நம்புகுறிச்சி செல்வராஜ், மேலரசூர் செல்லமுத்து, எம்.கண்ணனூர் ஊராட்சி துணைதலைவர் முருகேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி, வரகுப்பை செல்வக்குமார் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி ஒன்றிய, நகர, கிளைகழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். தேர்தல் பிரசாரத்தையொட்டி அந்தந்த கிராமங்களில் கட்சி கொடி கட்டி, தொண்டர்கள் புடைசூழ மேளதாள வரவேற்பு அளித்து வீதிவீதியாக நடந்தும், பல்வேறு இடங்களில் திறந்த வேனிலும் பிரச்சாரம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com