ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா உறுதி பாதிப்பு எண்ணிக்கை 11,214 ஆக உயர்ந்தது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளிலல் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 214 ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா உறுதி பாதிப்பு எண்ணிக்கை 11,214 ஆக உயர்ந்தது
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 127 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ராணிப்பேட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்த 19 வயது ஆண், வக்கீல் தெரு பகுதியை சேர்ந்த 48 வயது ஆண், ஆத்துக்கால்வாய் தெருவை சேர்ந்த 60 வயது பெண், சாழிநாயுடு தெருவை சேர்ந்த 45 வயது ஆண், 45 வயது பெண், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 48 வயது ஆண், ரெயில்வே ஸ்டேசன் ரோடு பகுதியை சேர்ந்த 56 வயது ஆண், 87 வயது பெண், 56 வயது ஆண், எம்.பி.டி.ரோடு பகுதியை சேர்ந்த 62 வயது ஆண், முக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 42 வயது ஆண், ராணிப்பேட்டை சிறுவர் இல்லத்தை சேர்ந்த 14 வயது ஆண், வள்ளலார் நகர், விவேகானந்தா தெருவை சேர்ந்த 42 வயது ஆண், வானாபாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 75 வயது ஆண், சிப்காட் பகுதியை சேர்ந்த 49 வயது ஆண், புளியங்கண்ணு பகுதியை சேர்ந்த 42 வயது பெண், அம்மூர் அடுத்த அல்லிகுளம் பகுதியை சேர்ந்த 59 வயது ஆண், வேலம் பகுதியை சேர்ந்த 22 வயது ஆண் ஆகிய 19 பேரும் அடங்குவர்.

அதேபோல் காவேரிப்பாக்கம் வட்டார பகுதியில் உள்ள பாணாவரம், அத்திப்பட்டு, மாமண்டூர், மகேந்திரவாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 214 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் மொத்தம் 880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 79 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 3 ஆயிரத்து 479 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது எனவும் மாவட்டத்தில் மொத்தம் 656 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com